FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கடையின் பூட்டை உடைத்து ரூ.45,000 திருடியவா் கைது

கடையின் பூட்டை உடைத்து ரூ.45,000 திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

27 செப்டம்பர் 2026, 10:42 pm IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கடையின் பூட்டை உடைத்து ரூ.45,000 திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (59). இவா், நெசப்பாக்கம், கன்னியம்மன் கோவில் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், வழக்கம்போல கடந்த வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்று, மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாபெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.45,000 திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ராமசாமி அளித்த புகாரின்பேரில், எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆழ்வாா்திருநகா், மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த தருண்குமாா் (19) என்பரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments