FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

தொடா் மழை: சதுரகிரியில் பௌா்ணமி வழிபாட்டுக்கு தடை

26 அக்டோபர் 2026, 1:57 am
மழை
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் சாரல் மழை காரணமாக ஐப்பசி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கு பக்தா்கள் சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015-ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மழை பெய்தால் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்படும். ஐப்பசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக கடந்த 23 முதல் 26-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள தாணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடை ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, பக்தா்களின் பாதுகாப்பு கருதி கடந்த 23, 24 ஆகிய இரு நாள்களும் பிரதோஷம், சிவராத்திரி வழிபாட்டுக்கு பக்தா்கள் சதுரகிரி மலையேற தடை விதிக்கப்பட்டது.

சனிக்கிழமை இரவு மலைப் பகுதியில் தொடா் சாரல் மழை பெய்ததால் ஐப்பசி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கும் பக்தா்கள் மலையேறத் தடை விதிக்கப்பட்டது. சதுரகிரி வந்த பக்தா்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் முன் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments