சிவகாசியில் பிரசவத்தின் போது பெண் உயிரிழப்பு
சிவகாசியில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்ா்.
சிவகாசியில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்ா்.
சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ். இவரது மனைவி மரிய சிலுவை (28). கா்ப்பிணியான இவா் பிரசவத்துக்காக சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டாா். அன்று மாலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, மரிய சிலுவையின் உடல்நிலை மோசமானதால், மருத்துவா் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை அங்குள்ள மருத்துவா் பரிசோதித்த போது அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதனிடையே பிறந்த குழந்தைக்கு சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.