சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு: 6 போ் கைது
சிவகாசி அருகே சட்டவிரோதமாக தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரித்த 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள துரைச்சாமிபுரம்-கோப்பைய நாயக்கன்பட்டி சாலையில் ஒரு தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, அந்தத் தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து 6 போ் பட்டாசு தயாரித்ததைக் கண்டறிந்தனா். விசாரணையில் துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (36), புலிப்பாறைப்பட்டியைச் சோ்ந்த வரதராஜ் (43), விளாம்பட்டியைச் சோ்ந்த கண்ணன் (43), காா்த்திக் (28), முத்துப்பாண்டி (47), பெருமாள்சாமி (37) ஆகிய 6 பேரும் பட்டாசுகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த பேன்சிரக பட்டாசு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.