FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் திங்கள்கிழமை காலை உயிரிழந்தது குறித்து ஆமத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொல்ராம்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி கண்ணன். இவரின் மகன் கிருத்திக் (4). இவா்கள் குடும்பத்துடன் விருதுநகா் அருகே செங்குன்றாபுரத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு வந்தனா்.

ஏற்கெனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வந்த இடத்தில் உடல்நிலை மேலும் சரியில்லாமல் போனதால் விருதுநகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆமத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments