FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

வங்கிக் கணக்கு
பகிர்:

மாத ஊதியம் அல்லது ஓய்வூதியம் பெறுவது, சிலிண்டர் மானியம்பெற என பல்வேறு பணிகளும் இப்போது வங்கிக் கணக்கு மூலமாகவே நடைபெறும் நிலையில், பலரும் ஒரே ஒரு வங்கிக் கணக்கில்தான் அனைத்து பணப்பரிமாற்றங்களையும் மேற்கொள்வார்கள்.

அவ்வாறு அனைத்து நிதிசார்ந்த பணிகளையும் ஒரே வங்கிக் கணக்கின் மூலம் செய்பவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஏனெனில், நமது முதன்மையான, ஒரே வங்கிக் கணக்கு விவரங்களை பலருக்கும் பகிர்ந்திருப்பதால், அதில் வங்கி மோசடி நடப்பதற்கான அபாயங்கள் அதிகம்.

எனவே,

ஓடிபி பகிர வேண்டாம்

இதுவரை நடந்த மோசடிகளில் அதிகமான சிக்கலை ஏற்படுத்தியிருப்பது ஓடிபி பகிர்வது, எனவே, ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது ஓடிபி, ஏடிஎம் பின் எண் உள்ளிட்ட எதையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வங்கிகள் ஒருபோதும் தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் ஓடிபி கோருவதில்லை.

அறிவுறுத்தல்களை கேளுங்கள்

வங்கியிடமிருந்து வரும் பொதுவான மின்னஞ்சல்கள், தகவல்களை கவனித்துப் படிக்கவும். பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் வந்தாலும் அதனை பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

வங்கியில் தகவல்களை அப்டேட் செய்யுங்கள்

வங்கியில் ஒரு செல்போன் எண் கொடுத்திருப்போம். அது தற்போது பயன்பாட்டில் இல்லை என்றால் அப்படியே விட்டுவிடாமல், புதிய எண்ணைக் கொடுத்து புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

வங்கியில் செல்போன் எண் புதுப்பிப்பது முக்கியம்.

பொதுவிட வைஃபை வேண்டாம்

வங்கிப் பரிவர்த்தனைகளுக்குப் பொது வைஃபையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகள் மூலம் ஹேக்கர்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகும் அபாயம் உள்ளது. வீட்டு வைஃபை அல்லது மொபைல் நெட்வொர்க் மட்டும் பயன்படுத்துங்கள்.

பலமான பாஸ்வேர்டு

உங்கள் நண்பரைச் சொல்லுங்கள், உங்களைச் சொல்கிறேன் என்ற பழமொழி போல அல்லாமல், உங்களைப் பற்றி அறிந்தவர்களால் உங்கள் பாஸ்வேர்டை கணித்துவிடக் கூடிய வகையில் இல்லாமல், சற்று பலமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள்.

ஏடிஎம் பின்

ஏடிஎம் பின் எண்ணை, அதன் அட்டையின் உறையிலேயே எழுதி வைப்பது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். அட்டை தொலைந்தால்கூட பரவாயில்லை. பின் எண்ணுடன் தொலைந்தால் நிலைமை மோசமாகிவிடும்.

முடிந்தவர்கள், மாத ஊதியம் வரும் வங்கிக் கணக்கிலிருந்து சிறு தொகையை மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றி அதிலிருந்து செலவுகளை மேற்கொள்வது போன்றவற்றை செய்ய முயற்சிக்கலாம்.

summary

Do you have only one bank account? Make sure you don’t make this mistake!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.