தடைகளைத் தாண்டினேன்!
சந்தனக் கடத்தல் வீரப்பன் கதை "வனயுத்தம்' என்ற பெயரில் படமாக வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கதை "வனயுத்தம்' என்ற பெயரில் படமாக வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சொல்கிறார்: ""இந்தப் படத்தை வெளியிடுவதற்குள் எனக்கு எத்தனை தடைகள், இடையூறுகள்! வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி என்மீது வழக்குத் தொடுத்தார். அவருக்கு 25 லட்சம் ரூபாய் ஈட்டுத் தொகை கொடுக்கும்படி நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டது. படத்தின் தெலுங்குப் பதிப்பு உரிமைகளை விற்றதில் எனக்குக் கிடைத்த பணத்தில் அந்த தொகையை முத்துலட்சுமிக்குக் கொடுத்தேன். படத்தின் பல காட்சிகளை வெட்டும்படியும் சில காட்சிகளை மங்கலாகக் காட்டும்படியும் கீழ்க்கோர்ட்டுகள் தீர்ப்பளித்தன. நான் உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் பண்ணினேன். அவர்கள் எந்தக் காட்சியையும் வெட்ட வேண்டாம், மங்கலாகக் காட்ட வேண்டாம் என்று தீர்ப்பு அளித்தார்கள். இப்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வீரப்பன், காலஞ்சென்ற பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தும் காட்சி படத்தில் வருகிறது. ராஜ்குமாரின் குடும்பத்தினர் படத்தின் கன்னட பதிப்பான "அட்ட ஹாஸô' வைப் பார்க்க விருப்பப்படவில்லை என்று ஒரு செய்தி... அந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களுடைய மனம் வேதனைப்படும் என்பதால்தான் அவர்கள் பார்க்க விரும்பவில்லையோ என்று நினைக்கிறேன். ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா என்னிடம் நான் அவர்களுடைய மனதைப் புண்படுத்தியதாக எதுவும் சொல்லவில்லை. என் வாழ்வில் நான் இரண்டு நடிகர்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். ராஜ்குமார் ஒருவர். இன்னொருவர் ரஜினிகாந்த்''.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.