FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

டாக்டரின் நகைச்சுவை பதில்கள்!

Updated On : 21 ஏப்ரல் 2024, 12:00 am IST
பகிர்:

கல் தூக்கம் உடம்புக்கு ஆகாதுன்னு டாக்டர் சொன்னாரா...?'

'இல்லை.. ஆபிஸ் மேனேஜர் சொன்னாரு...'



Advertisement

Advertisement

'டாக்டர்.. ஆபரேஷனுக்கு போட்ட தையலை எப்போ பிரிப்பீங்க?'

'டெய்லர் வந்ததும் பிரிச்சிடலாம்...'

-அ.செந்தில்குமார், சூலூர்.

'டாக்டர்.. கீழே குனிந்து காலை தொட கஷ்டமாக இருக்கு..'

'ஏன்.. கீழே குனியறீங்க...?'

'அப்புறம் எப்படி சாக்ஸை காலில் மாட்டுறதாம்...'

-அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

'சின்ன இருமலுக்கு எதுக்கு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றீங்க.. டாக்டர்...'

'நீங்க சொகுசு காரில் வந்ததை நான் பார்த்தேன். அதான்...'



'தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்க.. சரியாகிடும்...'

'அப்போ நான் வேகமா நடப்பேனா டாக்டர்...'-

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'டாக்டர்.. என்னை தலைக்கு தண்ணீர் கொட்டிக் கூடாதுன்னு சொல்றீங்க..?'

'அப்போ உங்க மனைவியை கொட்ட சொல்லுங்க..?'



'காஷ்மீரில் இருக்கிற உங்க மாமாவுக்கு என்னங்க உடம்பு...'

'அவருக்கு பார்டரில் சுகர் இருக்கிறதாம்...'

-வி.சாரதி டேச்சு, சென்னை.

'சோஷியல் மீடியாவுக்கு ரொம்ப அடிக்ட் ஆகிட்டேன் டாக்டர்.. என்ன செய்ய..'

'கவலைப்படாதீங்க.. என்னோட ஐ.டி.யை பாலோ பண்ணுங்க... டிப்ஸ் டெய்லி அப்டேட் பண்ணுவேன்...'



'என்னடி பேரீச்சம்பழத்தை வைச்சு முறைச்சு பார்க்குறே...'

'பேரீச்சம்பழத்துல இரும்புச் சத்து இருக்குதுன்னு டாக்டர் சொன்னாரு.. அதான் தேடிட்டு இருக்கேன்...'

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

'ஊசி குத்தும்போது டாக்டர் ஏன் கண்ணை மூடிக்கிறாரு..?'

'அடுத்தவங்க படுற அவஸ்தையை பார்க்கக் கூடாதுன்னுதான்...'



'மனசுல கவலை இருந்தா தூக்கம் வராதுதான். இந்த வயசுல என்ன கவலை உங்களுக்கு...?'

'தூக்கம் வரவில்லைன்னுதான் டாக்டர்...'



'அந்த டாக்டருக்கு சினிமா தியேட்டர் கூட ஆபரேஷன் தியேட்டர் மாதிரிதான்...'

'எப்படி...?'

'சினிமாவுக்கு கூட நர்ஸ் இல்லாம போக மாட்டாரு...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments