முகப்பு
தினமணி கதிர்

நவீன சிங்கப்பூரின் வழிகாட்டி...

சிங்கப்பூரில் வானுயர்ந்து நிற்கும் கட்டடங்களைப் பார்த்து பிரமிப்போருக்கு ஒரு ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? இதற்கு அச்சாரமிட்டது நாராயண பிள்ளை என்ற தமிழர்தான்.

Updated On : 10 நவம்பர் 2024, 12:00 am IST
பகிர்:

முத்துரத்தினம்

சிங்கப்பூரில் வானுயர்ந்து நிற்கும் கட்டடங்களைப் பார்த்து பிரமிப்போருக்கு ஒரு ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? இதற்கு அச்சாரமிட்டது நாராயண பிள்ளை என்ற தமிழர்தான்.

சிங்கப்பூர் விடுதலை அடைந்தவுடன் ஆட்சிமொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் சுமார் ஒரு லட்சம் பேர் தமிழை தாய்மொழியாகப் பேசுகின்றனர். இங்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில், மொழி சிறுபான்மையிராக இருப்பதால் ,அரசு அங்கீகாரம் பெற்ற மொழியாகவே 'தமிழ்' உள்ளது.

Advertisement

1819 இல் ராபின்ஸ் என்ற ஆங்கிலேயருடன் சிங்கப்பூருக்கு வந்து இறங்கினார் நாராயணபிள்ளை. அது மட்டுமல்ல சிங்கப்பூருக்கு வந்த முதல் தமிழர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அரசு கருவூலத்தில் தலைமை குமாஸ்தாவாக வேலையில் சேர்ந்து, சிங்கப்பூரின் முதல் கட்டட ஒப்பந்ததாராக உயர்ந்தார். பல செங்கல் தயாரிப்பாளர்கள் , தச்சுத் தொழிலாளர்கள், துணி வியாபாரிகளை சிங்கப்பூருக்கு அழைத்து வந்த நாராயண பிள்ளை சிங்கப்பூர் தீவை வளமாக்கினார்.

பின்னர், அவர் துணி வியாபாரத்தில் முழுமையாக ஈடுபட்டு , நகரில் மிகப் பெரிய துணிக்கடையை நிறுவினார். 1822இல் நேரிட்ட தீ விபத்தில், துணிகள் பெருமளவு சேதமாகியபோது நாராயணபிள்ளைக்கு ஆங்கிலேய நண்பர் ராபின்ஸ் உதவினார்.

இன்று சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 'லிட்டில் இந்தியா' என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலை கட்டியதும் நாராயணபிள்ளைதான். இவர் தமிழர்களுக்காக ,அவர்கள் நலனுக்காக பாடுபட்டதோடு, ஒட்டுமொத்த சிங்கப்பூர்வாழ் இந்தியர்களின் பாதுகாவலராகவும் திகழ்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.