FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

தேட வேண்டிய நிலையில் திண்ணை...

அன்று திண்ணைகள் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால், இன்று திண்ணைகள் இருக்கும் வீடுகளைப் பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது.

Updated On : 19 ஜூலை 2026, 4:10 am IST
பகிர்:

அன்று திண்ணைகள் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால், இன்று திண்ணைகள் இருக்கும் வீடுகளைப் பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது. இந்தத் திண்ணைகள் குறித்து, கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு நூலில், 'திண்ணை' களைப் பற்றி கூறியிருந்தது:

'ஊர்களைக் கடந்து போகும்போது, ஆங்காங்கே இளைப்பாறிக் கொள்வதற்கு என்றே வீடுகளை அலங்கரித்தபடியே வரிசையாகத் திண்ணைகள் இருக்கும். சில பகுதிகளில் 'திரணை' என அழைக்கப்படும் இவை இல்லாத வீடுகளே (அப்போது) இல்லை.

சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே இப்படி வீடுகள் இருந்ததாகச் சொல்கின்றனர். கிராமத்தில் ஒருவர் புதிதாக வீடுகள் கட்ட ஆரம்பித்தால், முதலில் திண்ணைகள் அமைக்கவே இடம் பார்ப்பார்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு வீட்டிலும் வெளித்திண்ணை, உட்திண்ணை என்று இரண்டு வகைகள். வெளித்திண்ணையானது தலைவாசலையொட்டி, இருபுறமும் இருக்கும். தெரியாத ஆள்கள் வந்தால் உட்கார்ந்து பேசுவதற்கும், மற்ற நேரங்களில் படுத்து உறங்குவதற்கும் அது உபயோகப்படும். சில நேரங்களில் வழிப்போக்கர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஒருவருக்கொருவர் ஊர்க்கதை பேசுவதும் இங்குதான். 'சோறு போட வாடீ'ன்னு கணவன் அழைக்கும் வரையில், பேச்சு நிற்காது. வீட்டில் உள்ள வயதான மூதாட்டிகள் குழந்தைகளைக் கூட்டி வைத்து கதைகள் இங்கு அமர்ந்தே சொல்வார்கள்.

இளைஞர்களுக்கான பூங்கா, கடற்கரைகளும் அதுதான். கதாநாயகர்கள் போன்று மடிப்பு குறையாத சட்டையைத் திரும்பத் திரும்ப மடித்துவிட்டபடியே இளைஞர்கள் நோட்டமிடுவதும், வீட்டுக்குள்ளே ஏதாவது வேலை இருந்தாலும், அவ்வப்போது நடைக்கு வந்து பெண்கள் தரிசனம் அளித்துவிட்டுப் போவதும் நடந்துகிட்டே இருக்கும்.

இந்த வம்பு, தும்புகளில் அவ்வப்போது சின்னஞ்சிறு சண்டைகள் வருவதும் வழக்கம். ஆனால், சில நாள்களில் அந்தச் சண்டைகள் காணாமல் போய்விடும். ஏனெனில், உறவுகளைப் பலப்படுத்த பயன்பட்டதே இந்தத் திண்ணைகள்தான்.

இப்படிப்பட்ட திண்ணைகளை இன்று தேட வேண்டியிருக்கிறது. கிராமங்களிலும்கூட 'இது ஏன் இடத்தை அடைச்சிட்டு இருக்கு'ன்னு திண்ணைகள் அமைப்பதை மக்கள் விரும்புவதில்லை. இடப் பற்றாக்குறையோட மனசும் சுருங்கிவிட்டதையும் சேர்த்துக்கிடணும்' என்று கி.ராஜநாராயணன் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments