முகப்பு
தினமணி கதிர்

ஒரே நாளில் நாலு பருவங்கள்!

வெயில், பனிப்பொழிவு, மூடுபனி, மழை என அடுத்தடுத்த சில மணி நேரங்களிலேயே வியக்கத்தக்க வகையில் நடைபெறும் மாற்றத்தை உலகில் ஐந்து இடங்களில் ரசிக்கலாம்.

Updated On : 31 மே 2026, 12:22 pm IST
இன்டர்லேகன்
பகிர்:

வெயில், பனிப்பொழிவு, மூடுபனி, மழை என அடுத்தடுத்த சில மணி நேரங்களிலேயே வியக்கத்தக்க வகையில் நடைபெறும் மாற்றத்தை உலகில் ஐந்து இடங்களில் ரசிக்கலாம். பனி மூடிய மலைகளும் வெயில் நிறைந்த கடற்கரைகளும் இருக்கும்போதே ஏற்படும் திடீர் மழைப் பொழிவானது ஆச்சரியப்பட வைக்கும்.

லடாக்: காஷ்மீரில் உள்ள இந்த நகரமானது 'குளிர்ந்த பாலைவனம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரே நாளில் வெப்ப நிலையில் பெரிய வேறுபாடுகள் காணப்படும். தெளிவான நீல வானம் விரைவில் மாறி, பனிப் பொழிவு, குளிர் காற்று, அடர்த்தியான மேக மூட்டம் ஏற்படும்.

லடாக்

குயின்ஸ் டவுன்: நியூஸிலாந்து நாட்டின் தென் தீவில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா நகரமான இது, தெற்கு ஆல்ப்ஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளது. சில மணி நேரங்களிலேயே பிரகாசமான சூரிய ஒளியிலிருந்து மழை, மூடு பனி, பனிப் பொழிவு எனப் பருவங்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும்.

Advertisement

Advertisement

குயின்ஸ் டவுன்

ரெய்க்யாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ரெய்க்யாவிக், கெஃப்லாவிக் பகுதிகளில் காற்று மிக வேகமாக வீசும். இதனால் கோடைக் காலத்திலும் குளிர்சீதோஷ்ணநிலை நிலவும்.

ரெய்க்யாவிக்

வானிலை மாற்றங்கள் அன்றாடம் நடைபெறும். மாதத்தில் பல நாள் நான்கு பருவக் காட்சிகளையும் காணலாம்.

இன்டர்லேகன்: சுவிட்சர்லாந்தின் இன்டர் லேகன் நகரம் புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். இங்கு காலையில் வெயில், மதியம் மழை, மாலை பனி, இரவு குளிர் என ஒரே நாளில் நான்கு வித பருவங்களையும் ரசிக்கலாம். ஆல்ப்ஸ் மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி விரைவான மாற்றங்களுக்கு உட்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

டென்வர்: அமெரிக்காவின் கொலாராடோ மாகாணத்தில் அமைந்துள்ள டென்வர் நகரம் அடிக்கடி மாறக்கூடிய வானிலையைக் கொண்டது. காலையில் வெயிலும், வறண்ட காற்றும் இருக்கும். பின்னர், சூழலே மாறி மழை பெய்யும். அதன்பிறகு வெயில், மழை என மாறிமாறி, இரவு குளிர்ந்த நிலைக்கு மாறும். இவ்வாறாக, மாறுபட்ட தட்ப வெப்ப நிலை இங்குள்ளது. ராக்கி மலைகளுக்கு இடையே இந்த நகரம் உள்ளது.

டென்வர்

-ஆர். ஆர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.