FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முடியும் வரை ஓடு!

'முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை' என்பார்கள். இதை உண்மையாக்கியவர்கள் பலர்.

18 அக்டோபர் 2026, 2:41 pm IST
- Fairfax Media Archives
பகிர்:

'முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை' என்பார்கள். இதை உண்மையாக்கியவர்கள் பலர். அவர்களுள் ஒருவர், எழுபது வயதாகும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இயானி ஸ்குரோஸ். இவர் மாரத்தான் ஓட்டத்தில் சாதித்த சாதனைகள் பிரமிக்க வைப்பவை.

1983-ஆம் ஆண்டு தனது முதலாவது அல்ட்ரா-மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள இவர் கையொப்பம் இட்டார். 153 மைல் தூரம் ஓடும் இது 'ஸ்பார்டத்லான்' என்று அழைக்கப்படுகிறது. பெரிய முயற்சி எதுவும் எடுக்காமலேயே இவர் இதை 21 மணி 53 நிமிடங்களில் முடித்தார். பின்னர் அடுத்த வருடம் 20 மணி 25 நிமிடத்தில் ஓடி முடித்து தனது முந்தைய சாதனையையே முறியடித்தார். இது இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை.

100 மைல்களை 11 மணி 46 நிமிடங்களிலும், 188 மைல்களை 24 மணி நேரத்திலும், 294 மைல்களை 48 மணி நேரத்திலும், 635 மைல்களை ஆறு நாள்களிலும், 1000 மைல்களை பத்து நாளிலும் வெவ்வேறு தருணங்களில் ஓடி முடித்தார். இப்படி குரோஸ் ஓடிய ஓட்டங்களின் சாதனை விவரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Advertisement

Advertisement

விஞ்ஞானிகள் இவரது இந்தச் சாதனைகளைப் பார்த்துப் பிரமிக்கின்றனர். இவருக்கு மற்றவர்களைவிட வேறுவிதமான தசைகள் (உடல் கட்டமைப்பு) உள்ளனவோ என்று அவர்கள் வியக்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'மற்றவர்கள் களைத்தவுடன் ஓடுவதை நிறுத்தி விடுகிறார்கள். நான் நிறுத்துவதில்லை. எனது உடலை மனதால் நான் வெற்றிக் கொள்கிறேன். நான் உடலிடம் களைக்கவில்லை என்று சொல்கிறேன். அது என் சொல்லைக்கேட்டுக்கொள்கிறது.' என்கிறார்.

மனதின் ஊக்கமான முயற்சியால் எதையும் சாதிக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுபவராக இவர் விளங்குகிறார். அதாவது, 'உங்களால் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்' என்பதே இவரது வெற்றியின் ரகசியம்.

'கடினமான காரியங்களை விரும்பிச் செய்யும் மனிதன் நான்' என்று இவர் கூறும்போது அதை யாரால் தான் மறுக்க முடியும்!

தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் இவர் ஆஸ்திரேலியாவுக்கு 1990-ஆம் ஆண்டு குடிபெயர்ந்தார். 1994-இல் இவர் ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றார். 2014-ஆம் ஆண்டு தனது 58 வயதில் அல்ட்ரா ஓட்டங்களிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றியுள்ள இவர் சிறந்த கவிஞரும்கூட. பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். 'தி சிக்ஸ்டேரன்ஆஃப் தி செஞ்சுரி' என்ற இவரது புத்தகம் புகழ் பெற்ற ஒன்றாகும்.

இவரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கும் ஒருவர் பெறும் உணர்வூக்கம் இது தான்: 'மனதைத் திடப்படுத்தி ஒரு லட்சியத்தை மேற்கொண்டால் அதைச் சாதிக்க முடியும்.

அதாவது, ஒவ்வொருவரும் ஆயிரம் மைல் ஓட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குறிக்கோளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெல்லுங்கள் என்பதைத் தான் இவர் வாழ்க்கை கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments