சாட்ஜிபிடியின் சிறார் சேவை
சாட் ஜிபிடியால் தற்கொலை, பிற மனநலப் பிரச்னைகள் சிறார்களிடம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அ. சர்ப்ராஸ்
சாட் ஜிபிடியால் தற்கொலை, பிற மனநலப் பிரச்னைகள் சிறார்களிடம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்று பல்வேறு நாடுகளில் சட்டப்போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், 18 வயதுக்குள்பட்டவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை 'சாட்ஜிபிடி டீன்' என்ற பெயரில் விதித்துள்ளது. டீன் கணக்குகளை ஒலி மூலம் பதிலளிக்கும் சேவையை சாட்ஜிபிடி ரத்து செய்துள்ளது. இதன்மூலம் சிறார்கள் சாட்ஜிபிடியிடம் கேட்டுப் பெறும் பதில்களை மனிதர்கள்தான் கூறுகிறார்கள் என நம்பமாட்டார்கள்.
அதேபோல், இளைஞர்களுக்கு இந்தச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் இருந்து விடுப்பு பெற, சாட்ஜிபிடி ஒரு செயற்கை நுண்ணறிவு சாதனம், இது காத்திருக்கும் என்ற தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் சாட்ஜிபிடியிடம் கணக்கு உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகள் தொடர்பான வீட்டுப் பாட சந்தேகங்களையே கேட்கிறார்கள். இதற்காக 'ஸ்டடி மோட்' எனும் பயிலும் சேவை அறிமுகமாகி உள்ளது.
Advertisement
Advertisement
வீட்டுப் பாடங்களை நினைவுபடுத்தவும், வினா-விடை, கடினமான கேள்விகளைக் காட்சிப்படுத்தல் பதில் அளித்து எளிதில் புரிவை வைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் இந்த ஸ்டடி மோட் ஆன் செய்யவேண்டும் என்பதையும் பெற்றோர் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் குறுக்கு வழியில் மாணவர்கள் பாடங்களைக் கற்பது தவிர்க்கப்பட்டு எளிதில் புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று சாட்ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்ஜிபிடியிடம் கேள்வி கேட்டு பயிலும் சிறார்களின் சந்தேகங்கள் சரியான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதா என்பதை பெற்றோர்கள் கண்காணிப்பது கடமையாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.