FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் வலிமையாக என்ன டானிக்?

எனக்கு நான்கு வயதில் மகன் இருக்கிறான். மிகவும் நோஞ்சானாக உடல் இளைத்து, உயரமும் குறைவாக உள்ளான்.

26 செப்டம்பர் 2026, 6:49 pm IST
பகிர்:

எனக்கு நான்கு வயதில் மகன் இருக்கிறான். மிகவும் நோஞ்சானாக உடல் இளைத்து, உயரமும் குறைவாக உள்ளான். பள்ளிக்குச் சென்றுவந்தால் அடிக்கடி சளி, காய்ச்சல், உடல்சோர்வு ஏற்பட்டு உடல் பாதிப்படைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளது. அவனுடைய உடல் பலம் வலுவடையவும், புஷ்டியாகவும், உயரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவும் சிறந்த ஆயுர்வேத டானிக் மருந்து உள்ளதா?

-கல்யாணி, ஈரோடு.

தாமரைப்பூ (கிழங்கு), விலாமிச்சை வேர், பெருங்குமிழம் பழம் (வேர்), அல்லிக்கிழங்கு, மஞ்சிட்டி, கத்திப்பூ, ஏலரிசி, சிற்றாமுட்டி வேர், ஜடாமாஞ்சி, கோரைக்கிழங்கு, நன்னாரிவேர், கடுக்காய்த் தோல், தான்றிக்காய்த் தோல், நெல்லிக்காய்த் தோல், வசம்பு, பூலாங்கிழங்கு, செவதைவேர், அவுரி வேர், பேய்ப்புடல், பர்படகம், மருதம்பட்டை, அதிமதுரம், இலுப்பைப்பூ, முசுமுசுக்கை (முராமாஞ்சி).

Advertisement

Advertisement

இந்த 23 வகை மருந்துச் சரக்குகளைச் சேர்த்து வெல்லம், திராட்சை, தேன், காட்டகத்திப்பூ போன்றவையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மாதம் ஊற வைத்து வடிகட்டி எடுக்கப்படும் ஆயுர்வேத டானிக் மருந்து ஒன்று விற்பனையிலுள்ளது. 2 ஸ்பூன் (10 மி.லி.) காலை, மதியம், இரவு உணவுக்குப் பிறகு நீங்கள் மகனுக்குக் கொடுத்து வந்தால், உடல் உபாதைகளைக் குணப்படுத்துவதுடன் பலம், புஷ்டி மற்றும் பசித்தீ எனும் ஜாடராக்னியையும் வளர்த்துத் தரும். உடல் வளர்ச்சியையும் ஏற்படுத்தித் தரும். நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துத் தரும்.

பசி நன்றாக எடுத்துச்சாப்பிட ஆரம்பித்து விட்டால், நோய் எதிர்ப்புச் சக்தியானது கூடி அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல், உடல்சோர்வு போன்றவை நீங்கிவிடும்.

லாக்ஷாதி குழம்பு எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை இளஞ்சூடாக உடல் முழுவதும் (தலை வேண்டாம்) தேய்த்து அரை மணிநேரம் ஊறியபிறகு வெந்நீரில் குளிப்பாட்டினால் உடல் புஷ்டி அடையும். தெம்பானது கூடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு பசி, உணவு, தாது போஷணம் மற்றும் ஓஜஸ் ஆகிய விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குழந்தை உண்ணும் உணவு சரியாக ஜீரணிக்கப்பட்டு உடலால் பயன்படுத்தப்படும்போது தான் நல்ல வளர்ச்சி கிடைக்கும். எனவே 'எவ்வளவு அதிகமாகச் சாப்பிடவைக்கிறோம்' என்பதைக் காட்டிலும் 'எவ்வளவு சத்தான உணவை, சரியான முறையில் குழந்தை எடுத்துக்கொள்கிறது?' என்பதே முக்கியம்.

தினசரி உணயில் இடம்பெறவேண்டியவை:

காலை உணவு:

இட்லி + சாம்பார்

தோசை + பருப்பு சாம்பார்

பொங்கல்

கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகள் (குழந்தைக்கு ஏற்றவாறு).

மதிய உணவு:

சாதம் அல்லது ஏற்ற தானிய உணவு

பருப்பு சாம்பார்

குறைந்தது ஒரு காய்கறி

கீரை

தயிர் அல்லது மோர் (குழந்தைக்கு ஒத்துக்கொண்டாள்).

மாலை பள்ளிக்குப் பிறகு:

பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட், இனிப்புப் பானங்கள் போன்றவற்றை தினசரி சிற்றுண்டியாகக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

அதற்குப் பதிலாக வாழைப்பழம், கொய்யாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், பேரிக்காய், வேகவைத்த சுண்டல், நிலக்கடலை, வீட்டில் தயாரித்த அடை அவியல், சிறிய அளவு நெய் சேர்த்த சத்தான உணவு போன்றவற்றை மாற்றி மாற்றிக் கொடுக்கலாம்.

இரவு உணவு எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும், அதிக எண்ணெய், அதிக காரம் இல்லாததாகவும் இருப்பது நல்லது.

வயதுக்கு ஏற்ற அளவில் பால் குடிக்கக் கொடுக்கலாம். புரதச்சத்து மிகவும் முக்கியம். பருப்பு, பயறு, கடலை, பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் சேர்க்கலாம். தாகம் ஏற்பட்ட பிறகே தண்ணீர் குடிப்பதை விட, நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

நல்ல உணவு, நல்ல ஜீரணம், போதுமான தூக்கம், மனஅமைதி மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறை ஆகியவை குழந்தையின் உடல் வலிமையை ஆதரிக்கின்றன. நோய்வராமல் தடுக்கும் வாழ்க்கை முறையை உருவாக்குவதே சிறந்த முதலீடு.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments