FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இழந்ததைப் பெறும் முயற்சியில் 'பெட்மேட்ச்'

செல்லப் பிராணிகளின் மரணம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக சோகத்தை ஏற்படுத்தும்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

செல்லப் பிராணிகளின் மரணம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக சோகத்தை ஏற்படுத்தும். இறந்த பிராணிகளை மீண்டும் மீட்கமுடியாது. இருப்பினும், அதே மாதிரியான உருவம் கொண்ட நாய், பூனை உள்ளிட்ட வீட்டு விலங்குகள் சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அந்த மகிழ்ச்சியை மீட்டுத் தரும் முயற்சியில் சூப்பர்ஃபிஷ் எனும் நிறுவனம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் களத்தில் குதித்துள்ளது.

அதற்காக "பெட்மேட்ச்' எனும் புதிய அப்ளிகேஷன் ஒன்றை ஐஓஎஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்ளிகேஷனில் மறைந்த நாய் அல்லது பூனையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் போதும். அதே வடிவில் உள்ள விலங்கு, நாம் வசிக்கும் இடத்துக்கு அருகே எங்கு உள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடும். பிறகென்ன, விரும்பினால் அந்த விலங்கை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம். அதே மாதிரியான நாயோ, பூனையோ வேண்டாம் என்றாலும் கூட, நமக்குப் பிடித்த உருவம் கொண்ட விலங்குகளை தத்தெடுத்துக் கொள்ளவும் முடியும்.

Advertisement

Advertisement

"இத்தேடுதலில் எழுத்துகளுக்கும், மனிதர்களுக்கும் வேலை இல்லை. எங்களது புதிய அல்காரிதம் ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆராய்ந்து, அதற்கு ஒத்த உருவம் கொண்ட புகைப்படத்தைக் காட்டும்' என்று சூப்பர்ஃபிஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தளத்தில் விநாடிக்கு 2 ஆயிரம் தேடுதலில் ஈடுபட முடியுமாம்.

இந்த அப்ளிகேஷன் மூலம் தங்களுக்குப் பிடித்த பொருள்களை எளிதாகக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால், அன்று வாங்க முடியவில்லை, இனி அதனை எங்கு தேடுவது? என்று ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments