FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இளைஞர்மணி

கரோனா... கொசுவால் பரவுமா?

நோய்க்கிருமிகளைப் பரப்பும் கொசு நம்மைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது.  இதனால் நோய்வாய்ப்பட்ட 5 லட்சம் பேர் ஒவ்வோராண்டும் இறந்து போகிறார்கள்.  

Updated On : 10 ஆகஸ்ட் 2020, 12:27 pm IST
பகிர்:

நோய்க்கிருமிகளைப் பரப்பும் கொசு நம்மைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. இதனால் நோய்வாய்ப்பட்ட 5 லட்சம் பேர் ஒவ்வோராண்டும் இறந்துபோகிறார்கள். கோடிக்கணக்கானோர் நோயால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் கரோனா நோய்த் தொற்றுக்குக் காரணமான நஅதந-இர்ஸ்-2 கொசுவின் மூலம் பரவுவதற்கான எந்த ஓர் அறிவியல் சான்றும் இதுவரை இல்லை. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை கொசு கடித்த பிறகு, வேறொருவரைக் கடிப்பதால் அந்த வைரஸ் அவருக்குத் தொற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தற்போது கருதப்படுகிறது.

என்றாலும் கொசு கடிப்பதன் மூலம் சில வைரஸ்கள் மனித உடலுக்குள் பரவத்தான் செய்கின்றன. டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிகா, ரோஸ் ரிவர் வைரஸ் ஆகியவை கொசுவினால் பரவுகின்றன. ஒருவித ஒட்டுண்ணியால் வரக் கூடிய மலேரியா காய்ச்சலும் கொசுவினால் தான் வருகிறது. ஆனால் கொசுவினால் எச்ஐவி, எபோலா போன்ற வைரஸ்களைப் பரப்ப முடிவதில்லை. அதுபோன்று, கரோனா வைரûஸயும் பரப்ப முடியாது.

Advertisement

Advertisement

குறிப்பாக பெண் கொசுதான் இந்த வைரஸ் பரவலுக்குக் காரணமாக இருக்கிறது. தனது உடலில் உள்ள முட்டைகளை நன்கு வளரச் செய்ய பெண் கொசுவுக்குச் சத்து தேவைப்படுகிறது. அந்தச் சத்து மனித ரத்தத்தில் உள்ளது. அதற்காகத்தான் கொசு கடிக்கிறது. இதை வைரஸ் பயன்படுத்திக் கொள்கிறது.

ஒருவரைக் கடித்து கொசு ரத்தத்தை உறிஞ்சும்போது அந்த ரத்தத்தில் உள்ள வைரஸ் கொசுவின் குடலுக்குள் செல்கிறது. குடலுக்குள் சென்ற வைரஸ் முதலில் குடலைப் பாதித்து, அதன் பிறகு குடலிலிருந்து வெளியேறி கொசுவின் பிற உறுப்புகளையும் பாதிக்க வேண்டும். கொசுவின் கால்கள், இறக்கைகள், தலை ஆகியவற்றை பாதிக்க வேண்டும். குறிப்பாக நுண்ணிய ஊசி போன்ற அதன் வாயுறுப்பில் பரவ வேண்டும். அப்படிப் பரவும் அளவுக்கு ரத்தத்தில் வைரஸ் இல்லை என்றால், அது கொசுவின் குடலிலேயே அழிந்துவிடும்.

எச்ஐவி வைரஸ் ஏன் கொசுக்களுக்குப் பரவுவதில்லை என்ற கேள்வி எழலாம். எச்ஐவி வைரஸ் உள்ள ஒருவரை கொசு கடித்தால் அந்த வைரஸ் கொசுவைத் தொற்றிக் கொள்ள வேண்டும். கொசு எச்ஐவி நோய்க்கு உள்ளாக வேண்டும். கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் எச்ஐவி வைரஸ் கலந்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் கொசு கடித்தால், எச்ஐவி வைரஸ் கொசு கடிக்கும் மனிதர்களைத் தொற்றிக் கொள்ளும். எச்ஐவி வைரஸ் மட்டுமில்லை, கரோனா வைரஸ் உட்பட வேறு எந்த வைரஸூம் கொசுவின் மூலமாகப் பரவ வேண்டும் என்றால் கொசு முதலில் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாக வேண்டும்.

எச்ஐவி வைரஸ் கொசுவை ஏன் தொற்றிக் கொள்வதில்லை? எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மனிதரின் உடலில் உள்ள ரத்தத்தில் கொசுவைத் தொற்றிக் கொள்ளும் அளவுக்கு எச்ஐவி வைரஸ் கலந்திருப்பதில்லை. அதனால் அந்த வைரஸ் கொசுவைத் தொற்றிக் கொள்வதில்லை. அதனால் கொசுவின் உமிழ்நீர்ச் சுரப்பிகள் பாதிக்கப்படுவதில்லை. கொசு தனது நுண்ணிய ஊசி போன்ற வாய் உறுப்பால் மனிதர்களைக் கடிக்கும்போது அதில் வைரஸ் இல்லாததால் மனிதர்களுக்கு எச்ஐவி, எபோலா போன்ற வைரஸ்கள் பரவுவதில்லை.

கரோனா வைரஸ், மனிதர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகளால் பரவுகிறது. அந்த வைரஸ் ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தை ஒருவர் தொடும்போது விரலில் ஒட்டிக் கொண்டு கண், வாய், மூக்கு வழியாக மனித உடலுக்குள் பரவுகிறது.

இதுவரை கொசுவைப் பாதிக்கும் அளவுக்கு கரோனா வைரஸ் கலந்துள்ள ரத்தத்தை உடைய ஒருவரை கொசு கடிக்கவில்லை; அதனால்தான் கொசுவின் மூலம் கரோனா வைரஸ் பரவலில்லை என்றே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments