முகப்பு
மகளிர்மணி

எரிவாயுவை சேமிக்க

< அவ்வப்போது குடிப்பதற்கான நீரைக் காய்ச்சுவதை தவிர்த்து அகலமானப் பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதற்கும் தேவைப்படும் தண்ணீரைக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டால் எரிவாயு அனாவசியமாக விரயமாகாது.

Updated On : 9 பிப்ரவரி 2016, 12:35 pm IST
பகிர்:

< அவ்வப்போது குடிப்பதற்கான நீரைக் காய்ச்சுவதை தவிர்த்து அகலமானப் பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதற்கும் தேவைப்படும் தண்ணீரைக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டால் எரிவாயு அனாவசியமாக விரயமாகாது.

< எரிவாயுவை மிச்சப்படுத்த வேண்டுமானால் எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத் தேவையானப் பொருட்களை எல்லாம் போட்டால் அந்த சூட்டிலேயே தாளித்து விடலாம்.

< யாராவது வீட்டில் அழைப்பு மணியை அடித்தாலோ அல்லது தொலைபேசி அழைப்பு வந்தாலோ காஸ் அடுப்பை அணைத்துவிட்டுச் செல்லுங்கள் எரிவாயு மிச்சமாவதுடன் மறதியால் ஏற்படும் சில விபத்துக்களையும் தவிர்க்கலாம்.

Advertisement

Advertisement

< இட்லி பாத்திரத்தில் இட்லி அவிக்கும் போது அதன் அடியில் பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவற்றை வைத்தால் அருமையாக வெந்துவிடும். எரிவாயுவும் மிச்சமாகும்.

< வீட்டிலுள்ள அனைவரும் ஒரே நேர்த்தில் உணவு அருந்தினால் மீண்டும் மீண்டும் உணவை சூடாக்குவதை தவிர்க்கலாம். எரிவாயுவையும் மிச்சப்படுத்தலாம்.

< அரிசி பருப்பு போன்றவைகளை முன் கூட்டியே ஊறப் போட்டு பிறகு எடுத்து சமைத்தால் அவை விரைவில் வெந்துவிடும். எரிவாயுவும் அநாவசியமாக விரயமாகாது.

< தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில்  வைக்கும்போது அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால் எரிவாயு மிச்சமாகும்.

< சமையலுக்குத் தேவையான காய்கறிகளை எல்லாம் முன்பே நறுக்கிக் கொண்டு பிறகு   அடுப்பைப் பற்ற வைத்தால் எரிவாயு மிச்சமாகும்.

< வாரத்தில் ஒருநாள்  இரவில் சமைக்காத இயற்கை உணவுகளான அவல், முளைகட்டிய பயறு, பழங்கள், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். இப்படி வாரத்தில் ஒருநாள் எடுத்துக் கொள்வதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments