முதுகு வலியைத் தடுக்க...!
நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும்.
அதிக எடையைத் தூக்கக் கூடாது. அப்படியே தூக்க வேண்டி இருந்தாலும், இடுப்பை வளர்த்துத் தூக்காமல் முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும்.
உடலை அதிகமாக வளைத்தல் கூடாது. திடீரென திரும்புதல் கூடாது.
ஹை- ஹீல்ஸ் செருப்புகளை அணியக் கூடாது.
கூடிய வரை இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட, நடந்தே செல்ல வேண்டும்.
உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும்.
முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது, நடுவில் உள்ள இருக்கையில் அமருவது நல்லது.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்தல் ஆகியன முதுகுவலி வராமல் தடுக்கும்.
முக்கியமாக, மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.