கடப்பா சாம்பார்
பாசிப் பருப்பை நிறம் மாறாமல் வறுத்து, வேகவைக்கவும், உருளைக்கிழங்கையும் வேகவைக்கவும்.
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம்- 20
மஞ்சள் தூள்- சிறிதளவு
Advertisement
Advertisement
தக்காளி- 2
பச்சை மிளகாய்- 3
பூண்டு- 3 பல்
உருளைக் கிழங்கு- 3
பாசிப் பருப்பு- கால் கிண்ணம்
உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய்- தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை- சிறிதளவு
அரைக்க:
தேங்காய்- கால் மூடி (துருவியது)
கசகசா- 2 தேக்கரண்டி
சோம்பு- 1 தேக்கரண்டி
செய்முறை:
பாசிப் பருப்பை நிறம் மாறாமல் வறுத்து, வேகவைக்கவும், உருளைக்கிழங்கையும் வேகவைக்கவும். பின்னர், மசித்துக் கொள்ளுங்கள். கசகசாவைச் சிறிதுநேரம் ஊறவையுங்கள்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்த பருப்பு, மசித்த உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.
உப்பு, மல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான கடப்பா சாம்பார் தயார்.
சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சாம்பார் பிரபலம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.