கறுப்பு உளுந்து அடை
அரிசியைத் தனியாக ஊற வைக்கவும். உளுந்தையும், துவரம் பருப்பையும் ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியுடன் இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
தேவையான பொருள்கள்:
கறுப்பு உளுந்து 200 கிராம்
இஞ்சி சிறு துண்டு
Advertisement
Advertisement
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
மிளகாய் வற்றல் 10
வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
புழுங்கல் அரிசி 500 கிராம்
துவரம் பருப்பு 2 கிண்ணம்
செய்முறை:
அரிசியைத் தனியாக ஊற வைக்கவும். உளுந்தையும், துவரம் பருப்பையும் ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியுடன் இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு கரகரப்பாக அரைக்கவும். துவரம் பருப்பையும், கறுப்பு உளுந்தையும் ஒன்றாக அரைத்து, அரிசி மாவுடன் உப்பு சேர்த்து அடைமாவின் பதத்துக்குக் கரைக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவும். அடுப்பில் வைத்தத் தோசைக்கல் காய்ந்ததும், சிறு எண்ணெய் ஊற்றி அடைகளாக வறுத்து வெந்ததும் எடுக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.