FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

நெய் மணக்கும் மாவுருண்டை

செட்டிநாடானது பிரமாண்டமான அரண்மனை போன்ற வீடுகள், கோயில்கள், ஆத்தாங்குடி டைல்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், பாரம்பரிய உணவுகள், நுட்பமான நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கு உலகளவில் புகழ்பெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
பகிர்:

ஜோதிமணி பாண்டியன்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைக்குள்பட்ட செட்டிநாடானது பிரமாண்டமான அரண்மனை போன்ற வீடுகள், கோயில்கள், ஆத்தாங்குடி டைல்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், பாரம்பரிய உணவுகள், நுட்பமான நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கு உலகளவில் புகழ்பெற்றது. இங்குள்ள உணவு வகைகளின் சிறப்புகளை அறிவோம்.

செட்டிநாட்டுச் சமையலில் இன்றியமையாத, அதே நேரத்தில் மிக உயர்ந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய அரிசி வகைதான் கவுனி அரிசி. பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரும், நகரத்தார்களின் விசேஷங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த அரிசி, இன்று உலக அளவில் ஒரு 'சூப்பர் ஃபுட்' ஆகக் கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

நகரத்தார்கள் மியான்மர், கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றபோது, அங்கிருந்து இந்த அரிய வகை அரிசியை செட்டிநாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். செட்டிநாட்டு திருமணங்கள், விசேஷங்கள் மற்றும் சாப்பாட்டு விருந்துகளில் 'கவுனி அரிசி இனிப்பு' பரிமாறுவது பெரும் கெளரவமாகக் கருதப்படுகிறது.

சீரகச் சம்பா அரிசி, மணத்தக்காளி வத்தல், கல்பாசி, மராட்டி மொக்கு போன்ற மசாலாக் கலவைகளுடன் விறகு அடுப்பில் சமைக்கப்படும் செட்டிநாட்டு உணவுகள் உலக அளவில் பிரபலமானவை.

'செட்டிநாட்டு உணவு முறை' என்பது காரசாரமான அசைவ உணவுகளுக்கு மட்டுமல்லாது, நுட்பமான கைப்பக்குவத்துடன் செய்யப்படும் தனித்துவமான இனிப்புகளுக்கும் பலகாரங்களுக்கும் பெயர் பெற்றது.

பச்சரிசி, உளுந்து சேர்த்து மிதமான சூட்டில் பொரித்தெடுக்கப்படும் மென்மையான வெள்ளைப் பணியாரமும், அதற்கேற்ற காரசாரமான மிளகாய்ச்சட்னியும் செட்டிநாட்டின் முதன்மை அடையாளம்.

பாசிப் பருப்பு, வெல்லம், நெய் சேர்த்துச் செய்யப்படும் இந்த இனிப்புப் பலகாரம், செட்டிநாட்டு விசேஷங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரிசி மாவு, தேங்காய்ப்பால் சேர்த்து மர அச்சுகளில் பிழிந்து செய்யப்படும் சீப்புச் சீடை மற்றும் மொறுமொறுப்பான மணக்கோலம் ஆகியவை நகரத்தார்களின் பாரம்பரிய நொறுக்குத்தீனிகள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டியில் செய்யப்படும் அதிரசம், பருப்பு, நெய் மணக்கும் மாவுருண்டை மற்றும் சுவையான கந்தரப்பம் ஆகியவை செட்டிநாட்டு விருந்துகளின் சிறப்பு அம்சங்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments