முகப்பு
மகளிர்மணி

சாதனை மாணவி...

ஓட்டப் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்து வருகிறார் கல்லூரி மாணவி இ.நிவேதா.

Updated On : 2 பிப்ரவரி 2026, 10:10 pm IST
பகிர்:

ஓட்டப் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்து வருகிறார் கல்லூரி மாணவி இ.நிவேதா. மகாராஷ்டிர மாநிலத்துக்கு உள்பட்ட புணேயில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெறும்பூரைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'எனது பெற்றோர் பி.இளங்கோவன், ஜெயலெட்சுமி பெல் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். நான் எல்.கே.ஜி. முதல் 12-ஆம் வகுப்பு வரை தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை வணிகவியல் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறேன். தொடக்கத்தில் பள்ளிகள், தெருக்களில் நடைபெறுகின்ற ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்றேன்.

பரிசுகள் பெற்றதால், எனக்கு ஆர்வம் அதிகரிக்கச் செய்தது. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராமன் நன்கு பயிற்சியளித்தார். தனியார் பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளர் விமல்குமாரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.

Advertisement

Advertisement

பின்னர், பள்ளிகள், பல்கலைக்கழக, மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றேன். 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 17,18 ஆகிய நாள்களில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான 800 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

தற்போது புணேவில் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளேன்' என்கிறார் இ.நிவேதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.