இஞ்சி தயிர்ப் பச்சடி
இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் சீவி தயார் செய்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
இஞ்சி - ஒரு துண்டு
Advertisement
Advertisement
புளி - ஒரு சிறு உருண்டை
பச்சை மிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 2
தயிர் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் சீவி தயார் செய்து கொள்ள வேண்டும். புளி, பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த விழுதை தயிரில் கலந்து விடவேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், மிளகாய் வற்றல் இவற்றைத் தாளித்து இஞ்சி தயிர் கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
ஆர். ஜெயலெட்சுமி