FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு

தக்காளிப் பழத்தை தோல் நீக்கி விதையை வடிகட்டி சாறாக்கிக் கொள்ள வேண்டும்.

14 நவம்பர் 2026, 10:17 pm
ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு
பகிர்:

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு - 250 கிராம்

Advertisement

Advertisement

பச்சைப் பட்டாணி- 150 கிராம்

பெரிய வெங்காயம் - 3

தக்காளி- 4

இஞ்சி - சிறிய துண்டு

கொத்துமல்லி - ஒரு கட்டு

துவரம் பருப்பு, மைதா மாவு,

கடலை மாவு - தலா ஒரு மேசைக்கரண்டி

தனியா, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

தக்காளிப் பழத்தை தோல் நீக்கி விதையை வடிகட்டி சாறாக்கிக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பை தேவையான தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், கொத்துமல்லி, இஞ்சி, தனியா, மிளகாய், சீரகம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த துவரம் பருப்பையும், பட்டாணியையும் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த பட்டாணி விழுதில் அரைத்த மசாலா, தக்காளிச் சாறு, கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கெட்டியாகக் கலந்துகொள்ள வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையானால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கின் தோலை அகற்றி, மேல் பக்கமாக சிறிதளவு துவாரம் செய்து, உள்ளே இருக்கும் பகுதியை சுரண்டி வெளியே எடுத்துவிட வேண்டும்.

பின்பு கலந்து வைத்திருக்கும் கலவையை துவாரத்தில் நிரப்பிக் கொள்ள வேண்டும். மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து உருளைக்கிழங்கின் மேல் பகுதியை இடைவெளி விடாமல் சன்னமாக நிரப்பி, ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்தவுடன் வேக வைத்த உருளைக்கிழங்குகளை கவனமாக அதில் போட்டு பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும். சூடாகச் சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.