FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பார் போற்றும் பாவையர்!

ஒரு சாதனை நிகழ்வு அந்த நாளோடு நிறைவடையலாம். அதனால் உருவாக்கப்படும் நூல்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசிக்கப்படலாம்.

18 அக்டோபர் 2026, 5:43 pm IST
பகிர்:

பொ.ஜெயச்சந்திரன்

ஒரு சாதனை நிகழ்வு அந்த நாளோடு நிறைவடையலாம். அதனால் உருவாக்கப்படும் நூல்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசிக்கப்படலாம்; ஆய்வு செய்யப்படலாம்; மேற்கோள் காட்டப்படலாம்.

இந்த நோக்கில் கோபிசெட்டிபாளையத்தில் அண்மையில் நடைபெற்ற 'பார் போற்றும் பாவையர்' நிகழ்வின் முக்கியத்துவம், உலகச் சாதனை என்ற அடையாளத்தோடு மட்டுமல்லாமல், பெண்களின் பங்களிப்புகளைப் பல்வேறு கோணங்களில் பதிவு செய்த மாபெரும் அறிவுசார் முயற்சியாகவும் அமைந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்த நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ.மகேந்திரன் கூறியது:

'ஒரு கருத்தரங்கம் என்பது குறிப்பிட்ட நாளில், நடைபெற்று நிறைவடையும் நிகழ்வு மட்டுமல்ல; அதில் முன்வைக்கப்படும் ஆய்வுகள், கருத்துகள், அனுபவங்கள், புதிய சிந்தனைகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டால், எதிர்வரும் தலைமுறையினருக்கு அறிவு ஆவணங்களாக மாறுகின்றன. இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு பன்னாட்டு அளவில் கருத்தரங்கங்களை முன்னெடுத்து, ஆய்வுக் கட்டுரைகளைப் பெரும் தொகுதிகளாக வெளியிடும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்கிறேன்.

2025-ஆம் ஆண்டில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 'இந்திய முகங்கள்' என்ற தலைப்பில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில், 1,500 ஆய்வுக் கட்டுரைகள், 15 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தென்காசி ஜே.பி. கல்விக் குடும்பத்துடன் இணைந்து 'இந்திய இளைய முகங்கள்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்கில் 1,600 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இவ்விரண்டும் சாதனை நிகழ்வுகளாயின.

மூன்றாவதாக, கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை, எஃப். எம்., மகிழ்ச்சி பவுண்டேஷன், புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, 'பார் போற்றும் பாவையர்' என்ற பொருண்மையில் நடத்திய நிகழ்வு கல்வி ஊடக ஒருங்கிணைப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக அமைந்தது. 2,500 ஆய்வுக் கட்டுரைகள், 25 தொகுதிகள் என்ற அளவில் உருவாக்கப்பட்ட இந்தப் பெரும் ஆவண முயற்சி, பெண்களைப் பற்றிய பல்வேறு ஆய்வுக் குரல்களை ஒரே தளத்தில் இணைத்தது.

இந்த நூல்கள் ஒரு நிகழ்வின் நினைவுச் சின்னங்களாக மட்டுமல்லாமல், எதிர்கால ஆய்வாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஆய்வுத் தரவுகளாகவும் அமையக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கட்டுரைகளைத் திரட்டுதல், அவற்றை வகைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல், தொகுத்தல், வெளியீட்டுக்குத் தயார்படுத்துதல் வரை பல கட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டு, அது ஒரு நூல் தொகுப்பில் இடம்பெறும்போது, தனிநபரின் ஆய்வு முயற்சி ஒரு பரந்த அறிவுசார் ஆவணத்தின் பகுதியாக மாறுகிறது. இதுபோன்று ஆயிரக்கணக்கான ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்படும்போது, அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சமூக, கல்வி, சிந்தனைப் பதிவாகவும் அமையக் கூடும்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் நேரடியாகவும் இணையவழியாகவும் பங்கேற்றனர். பங்களித்த பேராசிரியர்களுக்கு 'கோல்டன் குளோபல் விருது 2026' வழங்கப்பட்டது'' என்கிறார் மகேந்திரன்.

பொ. ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments