FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீட்டில் வளர்க்கக் கூடாத தாவரங்கள்!

வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்கள் உங்கள் வசிப்பிடத்தை அழகுபடுத்தவும், காற்றைச் சுத்தப்படுத்தவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன.

1 நவம்பர் 2026, 12:45 pm
பகிர்:

வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்கள் உங்கள் வசிப்பிடத்தை அழகுபடுத்தவும், காற்றைச் சுத்தப்படுத்தவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதேசமயம், சில தாவரங்கள் எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.

குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் ஒவ்வாமையை உண்டாக்கலாம்; பூச்சிகளையும் பூஞ்சைகளையும் ஈர்க்கலாம்; எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தலாம். மேலும், சில பாதிப்புகளை உண்டாக்கலாம். இதோ வீட்டில் வளர்க்கக் கூடாத தாவரங்கள் சில:

கள்ளி

Advertisement

Advertisement

கவர்ச்சிக்குப் பிரபலம். ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி எதிர்மறை ஆற்றலைக் குறிக்கும் கூர்மையான முள்களைக் கொண்டுள்ளன. இந்த முள்கள் குடும்பத்தினரிடையே வாக்குவாதங்கள், மன அழுத்தம், பதற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, படுக்கை அறைகள் அல்லது நுழைவுவாயிலுக்கு அருகில் வைப்பதைத் தவிர்ப்பது நல்வது.

கலாடியம் (யானைக்காது செடி)

இதன் இதய வடிவ பச்சை இலையைச் சாப்பிட்டால், அதிலுள்ள கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் கெடுதலை விளைவிக்கும். சிலருக்கு இதைத் தொட்டாலே எரிச்சல் ஏற்படும். நச்சுத் தன்மை வாய்ந்த செடி.

பருத்திச் செடி

இதன் பஞ்சு போன்ற வெள்ளை மலர்கள் அலங்காரமாய்த் தெரியலாம். ஆனால், பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, வறுமை, துரதிஷ்டத்துடன் தொடர்புடையவை. உலர்ந்த பருத்தி தூசி, பூஞ்சை அல்லது உண்ணிகளை ஈர்த்து நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், காற்றின் தரத்தையும் பாதிக்கலாம்.

பாபுல் செடி

(அக்கேசியா நிலோட்டிகா)

பாரம்பரிய மருத்துவத்தில் இதற்கு இடம் உண்டு. ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி பாபுல் போன்ற முள்கள் நிறைந்த செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. ஏனெனில் அவை பிணக்கு அல்லது சண்டையை ஈர்க்குமாம். வலிமையான அதன் முள்கள் குழந்தைகளுக்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் ஏற்றதல்ல. இதற்கு சூரிய ஒளி தேவைப்படுவதால் வீட்டுக்கு வெளியே வளர்ப்பதே நல்லது.

டிபென்பாச்சியா(ஊமைக்கரும்பு)

பெரிய கவர்ச்சியான இலைகளுக்காக வீடுகளில் வளர்க்கப்படும் செடி. ஆனால், இதனுள் டிஃபென்பாச்சியாவில் கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் எனப்படும் நச்சுச் சேர்மங்கள் உள்ளன. இவற்றைத் தெரியாமல் உட் கொண்டால் எரிச்சல் உணர்வு, தொண்டையில் வீக்கம், குமட்டல் அல்லது சுவாச பிரச்னைகள்கூட ஏற்படலாம். இது வளர்ப்புப் பிராணிகள் மற்றும் குழந்தைகளுக்கு நல்லதல்ல.

ஆலமரம்

கோயிலில் உள்ள ஆலமரம் புனிதமானது. ஆனால் அதை வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் வைப்பது முன்னேற்றத்தைத் தடுக்கும். தேக்க நிலையை உருவாக்கும். அடியில் விரிந்து பரந்துள்ள வேர்கள் சிக்கலைக் குறிக்கின்றன. இது வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைப் பாதிக்கும்.

ஆங்கில ஐவி

தொங்கும் அல்லது சுவர் செடியான இது ஆக்கிரமிப்பு, நச்சுத் தன்மையைக் கொண்டது. இதில் உள்ள சப்போன்னின்கள் செல்லப் பிராணிகள், மனிதர்களுக்கு தோல் எரிச்சல் அல்லது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதில் சிலந்திப் பூச்சிகள், செதில் பூச்சிகள் வந்து அமரக்கூடும். வாஸ்து சாஸ்திரப்படி, ஆதரவின்றி படரும் அல்லது ஏறும் தாவரங்கள் நிலையற்ற தன்மையைக் கொண்டு வரலாம்.

லில்லிகள்

லில்லி மலர்கள் நேர்த்தியானவை. நறுமணம் மிக்கவை. பிஸ் லில்லி, ஈஸ்டர் லில்லி, டைகர் லில்லி போன்றவை செல்லப் பிராணிகளுக்கு நச்சுத் தன்மையை அளிக்கும்.

சிறிதளவு உட் கொண்டாலும்கூட சிறுநீரகச் செயலிழப்பு அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments