சிங்கம் ஒன்று புறப்பட்டதே
மரங்கள் நிறைந்திருந்த மலைப்பாங்கான கானகப் பகுதி ஒன்றினுள் பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. மிருகங்களுக்கு தலைவராக சிங்கராஜாவும், மந்திரியாக
மரங்கள் நிறைந்திருந்த மலைப்பாங்கான கானகப் பகுதி ஒன்றினுள் பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. மிருகங்களுக்கு தலைவராக சிங்கராஜாவும், மந்திரியாக கரடியாரும் ஆலோசகராக புலியாரும் ஆட்சி செய்து வந்தார்கள்.
ஒருநாள் குகையில் இருந்த சிங்கராஜாவிற்கு கரடியார், புலியார் தவிர மற்ற விலங்குகள் தன்னை மதிக்கின்றனவா என்றறிய ஆசை உண்டானது!
சோதனை செய்வதற்காக இருவரிடமும் சொல்லிக் கொள்ளாமலேயே, காட்டில் தனியாக வலம் சென்றார் சிங்கராஜா!
Advertisement
Advertisement
சிறிது தூரம் சென்றவுடன், மான்களும், எருமைகளும் மேய்ச்சலில் இருப்பதைக் கண்டு கர்ஜித்தார்!
கர்ஜனையைக் கேட்டதும் ""மாட்டினால் தொலைந்தோம்'' என்றெண்ணிய மான்களும், எருமைகளும் மிரண்டு ஓடின!
இதேபோன்றே முயல், நரி, ஓநாய் என ஏனைய மிருகங்களும் கர்ஜனை கேட்டு ஓட்டம் பிடித்தன. உருவத்தில் பெரிதான யானைக் கூட்டங்களும் இதற்கு விதிவிலக்காகவில்லை.
சிங்கராஜாவிற்கு மகிழ்ச்சி கலந்த பெருமிதம் ஏற்பட்டுவிட்டது! தனது இருப்பிடத்திற்கு திரும்பி வந்து கரடியாரையும், புலியாரையும் அருகில் வரச்செய்து, தனது ஆசையையும், தனியாகச் சென்று வந்ததையும் விலங்குகள் தன் குரல் கேட்டவுடனேயே மிரட்சியாக ஓடியதையும் பெருமையாகக் கூறினார்.
""என் மேல் நன்றாக மதிப்பு வைத்திருக்கிறார்கள்'' என்றார்.
""இல்லை ராஜா.. நமது விலங்குகள் உங்கள் மேல் மதிப்பு வைக்கவில்லை... பயம் கொண்டிருக்கிறார்கள். அப்படி எனில் உங்கள் தலைமை சிறப்பாக இல்லை என உணர்த்துகிறார்கள்''.
""என்ன சொல்கிறீர் கரடியாரே..''
""ஆம் அரசே.. மன்னரின் மேல் மக்களுக்கு அன்பு ஏற்பட வேண்டுமே ஒழிய பயம் ஏற்படக்கூடாது. அதுமட்டுமில்லாமல் தன்னை நம்பியுள்ள மக்களுக்குப் பசியாற்ற வழிவகை செய்வதிலிருந்து, காட்டை வளமையடையச் செய்வதே ராஜாவிற்குப் பெருமை! அதுமட்டுமில்லாமல், வேட்டைக்காரர்களை காட்டில் ஊடுருவ விடாமல், விலங்குகளின் இனத்தை அழியாமல் பாதுகாப்பதே அரசருக்குச் சிறப்பு..''
கரடியாரின் விளக்கத்தைப் புரிந்துகொண்ட சிங்கராஜா தன் தவறை உணர்ந்து, இனி மரியாதை செலுத்தும்விதமாக நடந்து கொள்வதாகக் கூறினார்!
-எஸ்.சௌமியா
10ஆம் வகுப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.