முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

உன்னை ஒருவன் அளவின்றிப் புகழ்கிறானா?.... அவன் உன்னை ஏற்கெனவே ஏமாற்றி விட்டான்.... அல்லது....ஏமாற்ற விரும்புகிறான். 

Updated On : 9 பிப்ரவரி 2019, 1:45 pm IST
பகிர்:

உன்னை ஒருவன் அளவின்றிப் புகழ்கிறானா?.... அவன் உன்னை ஏற்கெனவே ஏமாற்றி விட்டான்.... அல்லது....ஏமாற்ற விரும்புகிறான். 
 -  ஹங்கேரி.

உனது நம்பிக்கை உறுதியாக இருக்கிறதா? அப்படியானால் உனது பிரார்த்தனை நீண்டதாக இருக்க வேண்டியதில்லை.  
-  அமெரிக்கா

பெரும் புகழுடன் இறந்தவன் ஒருபோதும் இறந்தவனாகவே கருதப்பட மாட்டான்.  -  அரேபியா

Advertisement

Advertisement

எவனொருவன் புகழை வெறுக்கிறானோ அவனுக்கு உண்மையான புகழ் தானாக வந்து சேரும்.  
-  அல்பேனியா

தங்கத்திற்கு இறக்கைகள் உள்ளன. உன்னை அது எங்கு வேண்டுமானாலும் தூக்கிச் செல்லும். தெய்வீக உலகத்தைத் தவிர.  
-  ஆப்கனிஸ்தான்

உன்னைப் புண்படுத்துவது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்.அப்போதுதான் பிறரைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்!  
- ஆப்பிரிக்கா

பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்றவர்கள் ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.  
-  வேல்ஸ்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை! அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது! 
- ஸ்காட்லாந்து

கரங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கடவுள் பார்க்கிறார். நிறைந்து இருக்கின்றனவா என்பதை அல்ல.  
-  இங்கிலாந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments