FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆழ்கடலில் ஓர் ஏரி

மெக்ஸிகோ வளைகுடாவில் பல ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள ஓர் அதிசய ஏரியை விஞ்ஞானிகள் 2015-ஆம் ஆண்டில் தொலையுணர் கருவியின் உதவியால் கண்டுபிடித்தனர்.

22 ஆகஸ்ட் 2026, 8:39 pm IST
பகிர்:

மெக்ஸிகோ வளைகுடாவில் பல ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள ஓர் அதிசய ஏரியை விஞ்ஞானிகள் 2015-ஆம் ஆண்டில் தொலையுணர் கருவியின் உதவியால் கண்டுபிடித்தனர். நூறு அடி குறுக்கு அளவு உள்ள இந்த ஏரி 3,300 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. ஏரியின் ஆழம் 12 அடி. இந்த நீரை எடுத்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறியது:

'இது சாதாரண கடல் நீரைவிட நான்கு மடங்கு அதிக உப்புத் தன்மை கொண்டது. இதன் அடர்த்தியும் அதிகம். உஷ்ண நிலை 19 டிகிரி செல்சியஸ். (66 டிகிரிஃபாரன்ஹீட்). உயிர் வாழ முடியாத அபாயகரமான கடல்சூழல் இதுவாகும். இப்படிப்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் கடலிலிருந்து வெளியேறி, கடலின் சுற்றுப்புறச் சூழ்நிலையில் நீரோடு எதிர்வினையாற்றும் பகுதிகளாகும்.

இங்கு எண்ணெய், வாயு வளம் அதிகமாகக் காணப்படும். விஷ மயமான உப்பு நீர் அடர்த்தியில் உள்ள பெரிய வேறுபாடு காரணமாக ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை. அதிக அளவான மெதேன், ஹைட்ரஜன் சல்ஃபைடு ஒரு சுவர் போல எழும்பி நின்று நீர் வாழ் உயிரினங்களை உள்ளே வர விடாமல் தடுக்கிறது. ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. பெரிய நீர் வாழ் பிராணிகள் இங்கு வந்தால் உடனடி மரணம் நிச்சயம்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments