FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பென்குயின் மனிதர்

பெல்ஜியம் நாட்டிலுள்ள 79 வயது மனிதர் ஆல்பிரட் டேவிட். 1968-ம் ஆண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் இவரின் கால்கள் சிக்கிக் கொண்டன. இதனால் இவரால் வேகமாக நடக்க முடியவில்லை. பென்குயின் போன்றே அசைந்து அசைந்து ந

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

பெல்ஜியம் நாட்டிலுள்ள 79 வயது மனிதர் ஆல்பிரட் டேவிட். 1968-ம் ஆண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் இவரின் கால்கள் சிக்கிக் கொண்டன. இதனால் இவரால் வேகமாக நடக்க முடியவில்லை. பென்குயின் போன்றே அசைந்து அசைந்து நடக்கத் தொடங்கினார். இவரது நண்பர்கள் ஆல்பிரட்டை, "மிஸ்டர் பென்குயின்' என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினார்கள். இது பிடித்துப்போகவே தனது நடை, உடை, பாவனை என அனைத்தையும் பென்குயின் போன்றே மாற்றினார். பென்குயின் சம்பந்தப்பட்ட பொம்மைகள், படங்கள், புத்தகங்கள் என வீட்டையும் பென்குயின் அருங்காட்சியகம் போன்று அமைத்துள்ளார். இறந்த பின்பு அன்டார்ட்டிகா கண்டத்தில் பென்குயின்கள் அதிகம் வாழும் இடத்தில் பென்குயின் வடிவிலான சவப்பெட்டியில், பென்குயின் போன்று உடையணிவித்து, தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments