ஹயில் செட்டில் படப்பிடிப்பு
"தங்க மீன்கள்', "பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கும் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
"தங்க மீன்கள்', "பேரன்பு' உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கும் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார்.
யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது..
Advertisement
Advertisement
தற்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.ஆர். ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கலை இயக்குநர் உமேஷ், இந்த படத்திற்காக அழகிய ரயில் செட்டை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். படப்பிடிப்பு நடந்து வருகிறது.