தேசிய விருது பெறும் ஜிவி பிரகாஷ்! தொடர்ந்து 2-வது முறை!
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு இன்று வெளியானது. இதில், 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த நடிகராக மம்மூட்டி, சிறந்த நடிகையாக யாமி கௌதம் என பலரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தமாக 10 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 1 விருது ‘ப்ளூ’ என்கிற ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார், கடந்தாண்டு வாத்தி (2023) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) தேசிய விருதை வென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்தாண்டும் ஒரு தேசிய விருதை அவர் வென்றுள்ளார்.
அமரன் (2024) படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஜிவி பிரகாஷுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் வாங்கவிருக்கும் மூன்றாவது தேசிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சூரரைப் போற்று (2020) படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை அவர் வென்றிருந்தார்.
GV Prakash wins a National Award for the second consecutive year!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.