வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது!
வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...
72 வது தேசிய விருதுகளின் பட்டியலில் வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி மலையாளப் படங்களின்மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்த் திரைப்படங்களான குக்கூ, வீரசிவாஜி போன்ற திரைப்படங்களில் பாடல்கள் பாடியதன்மூலம் தமிழ் ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'ஏ.ஆர்.எம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் அவர் பாடிய "அங்கு வான கோணிலு" என்ற பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரள அரசின் உயரிய திரைப்பட விருதுகளையும் வைக்கம் விஜயலட்சுமி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vaikom Vijayalakshmi has been announced as the winner of the National Award for Best Female Playback Singer in the list of the 72nd National Awards.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.