FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

திரைக்கதைக்கு 3 ஆண்டுகள்

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின்  தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் வலை தளத் தொடர் "சுழல்- தி வோர்டெக்ஸ்'.

Updated On : 12 ஜூன் 2022, 8:21 pm IST
பகிர்:

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின்  தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் வலை தளத் தொடர் "சுழல் - தி வோர்டெக்ஸ்'. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகி யிருக்கும் இந்த வலைதள தொடரில்  ஆர். பார்த்திபன், கதிர்,  ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அமேசான் ப்ரைம் விடியோவில் வரும் 17-ஆம் தேதி  முதல் இத்தொடர் வெளியாகவுள்ளது. புஷ்கர் - காயத்ரி பேசுகையில்,  "" இந்தத் தொடரின் கருவை மட்டும்தான் நாங்கள் முதலில் மும்பையில் இருந்த அமேசான் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் தொடர் என உறுதியளித்தார். அந்தத் தருணத்தில் எங்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை, தற்போது வரை பொறுப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. "விக்ரம் வேதா'விற்கு பிறகு எங்களை சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்தத் தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். 

மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்தத் தொடர் முதலில் இந்திய மொழிகளில்  வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்தத் தொடரின் கதையை படத்திற்கு எழுதுவது போல் வில்லன், கதாநாயகன், கதாநாயகி என  எழுதவில்லை. எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கிறோம். ஒரு புள்ளியில் கதாபாத்திரங்களை கடந்து கதை நிகழும் நகரம் கூட கதாபாத்திரமாக மாறியது. அதுதான் இது'' என்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments