முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சுசி கணேசன்

சுசி கணேசனின்  இயக்கத்தில் உருவாகியுள்ள "தில் ஹை கிரே' படம்  கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் அந்தஸ்த்தோடு பிரத்யேக ப்ரீமியர் பிரிவில் திரையிடப்பட்டுள்ளது.

Updated On : 10 டிசம்பர் 2023, 12:00 am IST
பகிர்:


சுசி கணேசனின்  இயக்கத்தில் உருவாகியுள்ள "தில் ஹை கிரே' படம்  கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் அந்தஸ்த்தோடு பிரத்யேக ப்ரீமியர் பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள்,  ""பார்ட்-2 எப்போது வரும் ? என்று கூச்சலிட்டதோடு,  திருப்பங்களுடன் கூடிய வலுவான கதைக்களத்திற்காக பிளாக் பஸ்டர் "த்ரிஷ்யம்' படத்தோடு ஒப்பிட்டு பேசியதாக சுசி கணேசன் தெரிவித்துள்ளது. அங்கு நடைபெற்ற கேள்வி,  பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இயக்குநர் சுசி கணேசன்,  நடிகர் அக்சய் ஓபராய் ஆகியோர் ரசிகர்களின்  பாராட்டு மழையில் நனைந்தனர். சுசி கணேசன் பேசும் போது ...."" பார்ட் 2 எப்போது என்று நீங்கள் கேட்பதே , படத்தின் வெற்றிக்கு அடையாளம் . இந்த உணர்வு, படப்பிடிப்பின் போதே ஏற்பட்டு, அதற்கான கதையைக் கூட விவாதித்துவிட்டோம்''  என்றார்.  

சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் சித்தரிப்பையும் வலியுறுத்தினார். அவர் குறிப்பிடுகையில், "தினமும் சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்கள் நடக்கின்றன. தேவையற்ற தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வதால் தேவையில்லாத பிரச்னைகளில்- தங்கை , மனைவி என  நமது குடும்பத்து பெண்கள் -சிக்கிக்கொள்கிறார்கள். இது ஒரு படம் மட்டுமல்ல. சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையை எப்படித் தலைகீழாக மாற்றும் என்பதை உணர்த்தும் எதார்த்தமான பாடம்'' என்றார். 

அக்ஷய் ஓபராயிடம் ஒரு பெண் ரசிகர் "நிஜமான ஹாக்கர் போலவே படத்துல இருக்கீங்க எப்படி என கேட்க "அந்தப் பெருமை சுசிக்கு சேரும். தனது நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை எப்படிப் பெறுவது என்பது அவருக்குத் தெரியும். எனது ஒவ்வொரு கண்ணசைவையும் தீர்மானித்தது அவரே' என்றார் . மனித உணர்வுகள் மற்றும் சைபர் குறை பற்றிய சிக்கலான ஆய்வுகளை உள்ளடக்கிய இப்படம், திரைப்பட விழா பார்வையாளர்களிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது உரையாடலில் எதிரொலித்தது. இத்திரைப்படத்தில் ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.