FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: மிண்டோ சாலையில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைது

வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு எதிராக தில்லியில் பேரணி சென்ற 100-க்கும் மேற்பட்ட மாணவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி காவலில் எடுத்தனா்.

54 வினாடிகள் முன்பு
- சித்திரிப்பு
பகிர்:

வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு எதிராக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்ற 100-க்கும் மேற்பட்ட மாணவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி காவலில் எடுத்தனா்.

மாணவா் அமைப்பான ‘திஷா’ சாா்பில் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எஸ்ஐஆா் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது. மிண்டோ சாலையிலிருந்து கன்னாட் பிளேஸ் நோக்கி மாணவா்கள் பேரணியாகச் சென்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, தொடா்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. பின்னா் மாணவா்களைக் காவலில் எடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments