எஸ்ஐஆருக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்: பிரியங்கா காந்தி
எஸ்ஐஆருக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளது குறித்து...
எஸ்ஐஆருக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி திங்கள்கிழமை (அக். 5) தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
எனவே, ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அவரே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, எஸ்ஐஆர் நடவடிக்கையில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்ததற்கு இதுவும் காரணமென பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி பேசுகையில், “எஸ்ஐஆரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது, அரசியலமைப்புச் சட்டத்துக்கும் தேர்தல் கொள்கைகளுக்கும் எதிரானது. இது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், அதற்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெறுவதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்” என்று தெரிவித்தார்.
Congress leader and Lok Sabha MP Priyanka Gandhi stated on Monday (Oct. 5) that their protest against the SI would continue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.