முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்...!

நாம் அதிர்ஷ்டசாலிகள்தான். நமது வாழ்க்கை முறையை நல்ல முறையில் அமைத்துகொண்டு, கவலைகளை மறந்து பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், முன்னேறலாம்.

Updated On : 11 ஆகஸ்ட் 2024, 12:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாம் அதிர்ஷ்டசாலிகள்தான். நமது வாழ்க்கை முறையை நல்ல முறையில் அமைத்துகொண்டு, கவலைகளை மறந்து பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், முன்னேறலாம். அதிர்ஷ்டக் காற்று எப்போதும் நம் பக்கம்தான். என்னென்ன பின்பற்ற வேண்டும். என்னென்ன விஷயங்களை நாம் பெற்றிருக்கிறோம், எந்தெந்த விஷயங்கள் யாருக்கும் கிடைக்காமல் இருக்கின்றன என்பதை அறிவோமா?

உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் ஒருவரிடம் இருந்தால் உலகில் உள்ள 75 சதவீதம் பேரைவிட வசதி பெற்றவர்தான்.

 வங்கியில் பணம் இருந்தால் அவ்வாறு உள்ள 8 சதவீதம் பணக்காரர்களுள் ஒருவர்தான்.

Advertisement

Advertisement

 கணினி இருந்தால், அந்த வாய்ப்புப் பெற்ற 1.1 சதவீதம் பேரில் நாமும் ஒருவர்தான்.

 நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் கைப்பேசியில் பேச முடிந்தால், அந்த வாய்ப்பே இல்லாத உலகில் இருக்கும் 15 கோடி மக்களைவிட மேலானவர்தான்.

 நோயின்றி காலையில் புத்துணர்வோடு எழுந்தால் அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலே உயிர் துறந்த பலரைவிட பாக்கியசாலிதான்.

 பார்வை, செவித்திறன், வாய் பேசாமை உள்ள எந்தக் குறைபாடும் இல்லாது இருந்தால், அவ்வாறு உலகில் உள்ள 20 கோடி மக்களைவிட நல்ல நிலையில்தான் இருக்கிறோம்.

 போர், பட்டினி, சிறைத் தண்டணை போன்ற சித்திரவதையில் சிக்காமல் இருந்தால் உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது.

 கொடுமைகளுக்கு உள்ளாகாமல் நீ விரும்பும் தெய்வத்தை வழிபட முயன்றால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையைப் பெற்றுள்ளோம்.

 பெற்றோரைப் பிரியாமல் அவர்களுடன் இருந்தால் துன்பத்தை அறியாதவர்தான்.

 தாகம் எடுத்தால் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைத்தால் கொடுத்துவைத்தவர்தான். உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

 கல்வியறிவு பெற்று படிக்க முடிந்தால், உலகில் படிக்க இயலாத 80 கோடிக்கு மேலானவர்களுக்குக் கிடைக்காத கல்வியை பெற்றுள்ளோம்.

 இணையத்தில் செய்தியை வாசித்தால், அந்த வசதி கிடைக்கப் பெறாத 300 கோடி பேரைவிட மேலானவர்தான்.

தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களைவிட கொடுத்த வைத்தவர்கள்தான்.

 தற்போது அனுபவித்துவரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் அதுகுறித்த அறிவு கூட இல்லாமல் உள்ள கோடிக்கணக்கானவரைவிட மேலானவர்கள்தான்.

 வீண் கவலைகளைவிட்டு அந்த வேலைகளைக் காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதைப் பொருள்கள் போன்றவற்றை விட்டுவிட்டு அதிர்ஷ்டசாலி என்ற தைரியத்தோடு இயன்றவரை பிறருக்கு உதவவுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.