நடன இயக்குநர் ராதிகா இயக்கும் கதை
பிரபுதேவா, லாரன்ஸ் உள்ளிட்ட பல நடன இயக்குநர்கள், பின்னர் இயக்குநராகவும் தன்னை நீருபித்தனர்.
பிரபுதேவா, லாரன்ஸ் உள்ளிட்ட பல நடன இயக்குநர்கள், பின்னர் இயக்குநராகவும் தன்னை நீருபித்தனர். இந்த வரிசையில் தற்போது இணைகிறார் நடன இயக்குநர் ராதிகா.
"தாலாட்டு' என்ற திரைப்படத்தில் தொடங்கி, பல்வேறு படங்களில், பல நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குநர் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களுக்கு நடனம் அமைத்த இவர், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
சாய் தன்ஷிகா கதையின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
படம் குறித்து இயக்குநர் ராதிகா பேசும் போது... "" திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால கனவு. அதற்கான பணிகள் நடந்து கொண்டே இருந்தன. இப்போதுதான் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் ஓர் ஆர்வத்தில்தான் நடனம் கற்றுக் கொண்டேன். பின்னர் அதுவே வாழ்க்கையாகி போனது. இதுவும் அப்படித்தான்.
எல்லாவற்றுக்கும் ஆர்வம்தான் அடிப்படை. சொல்லப் போனால் இதுதான் என் வெற்றியின் ரகசியம். மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக முன் வைக்கிற திரைக்கதை இது.
விஞ்ஞானம், அறிவியல் என ஆயிரம் கதைகள் பேசினாலும், பெண் பாதுகாப்பில் இன்னும் நாம் எங்கே இருக்கிறோம் என்பது கேள்விக் குறி. அதை எடுத்து வைக்கிற கதைதான் இது. படம் இறுதிக் கட்டப் பணிகளில் உள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும்'' என்றார் ராதிகா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.