FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிரிக்க வைக்கும் தொடர்

ரூ.10 கோடி மதிப்புள்ள வைரங்களை வியாபாரி ஒருவரிடம் இருந்து திருடிக்கொண்டு வரும் வைரங்களை தனது செருப்பில் மறைத்து வைப்பதோடு, அந்த செருப்பை தனது ஆடிட்டரான சிங்கம்புலியிடம் கொடுத்து விடுகிறார்.

Updated On : 6 ஏப்ரல் 2025, 12:35 am IST
பகிர்:

ரூ.10 கோடி மதிப்புள்ள வைரங்களை வியாபாரி ஒருவரிடம் இருந்து திருடிக்கொண்டு வரும் நாகரத்தினம் என்பவர், போலீஸ் தன்னை பின் தொடர்வதை அறிந்துக் கொண்டு, வைரங்களை தனது செருப்பில் மறைத்து வைப்பதோடு, அந்த செருப்பை தனது ஆடிட்டரான சிங்கம்புலியிடம் கொடுத்து விடுகிறார்.

இதற்கிடையே, வைரங்கள் மறைத்து வைக்கப்பட்ட செருப்புகள் காணாமல் போகின்றன. வைரத்தை பறிகொடுத்த வியாபாரி போலீஸ் உதவியுடன் தேடுகிறார். காணாமல் போன செருப்பில் வைரம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் சிங்கம்புலி, தனது மகன் விவேக் ராஜகோபால் உடன் இணைந்து செருப்பை தேடுகிறார். செருப்பு இருக்கும் இடம் தெரிந்தாலும், அதை எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

இறுதியில் வைரம் மறைத்து வைக்கப்பட்ட செருப்பு யார் கையில் கிடைத்தது? என்பதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க...சிரிக்க...சொல்லுவதுதான் "செருப்புகள் ஜாக்கிரதை' இணையத் தொடர்.

Advertisement

Advertisement

தமிழ் இணையத் தொடர்கள் என்றாலே ஆக்ஷன் டிராமா அல்லது க்ரைம் திரில்லர் ஆகிய பாணிகளாக மட்டுமே இருக்கும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் இந்த இணையத் தொடரின் 6 பகுதிகளும் சிரிக்க வைக்கிறது.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி, அவரது மகனாக நடித்திருக்கும் விவேக் ராஜகோபால் அவரது காதலி ஐரா என அனைத்து நடிகர், நடிகைகளும் போட்டி போட்டு பார்வையாளர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் காட்சிகளில் உள்ள நகைச்சுவை உணர்வுகளை சிந்தாமல், சிதறாமல் ரசிகர்களிடத்தில் கடத்தி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் ஜீ 5 இணையத்தில் இத்தொடர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments