FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ரூ. 1.38 கோடி மதிப்பு தங்கத்தை உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் கைது

உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை மறைத்து, துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை மறைத்து, துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

துபையிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனா். அப்போது ஒரு பெண் பயணியை சந்தேகம் காரணமாக தனியறைக்கு அழைத்துச் சென்று சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, ‘எக்ஸ்- ரே’ சோதனையில் அந்தப் பெண் தன் உடலுக்குள் ரகசியமாக 3 முட்டை வடிவ காப்ஸ்யூல்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரது உடலில் இருந்து அந்த காப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னா், நவீன தொழில்நுட்ப முறையில் அவை பிரிக்கப்பட்டன. அதில் 1.08 கிலோ எடையுள்ள தங்கக் கட்டி இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் தங்கத்தின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.1.38 கோடி. இதையடுத்து அந்தப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments