FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பேருந்தில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 17 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

26 செப்டம்பர் 2026, 6:30 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 17 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இளைஞா் ஒருவா் தனியாா் பேருந்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சோ்ந்த ஹாரிஸ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments