முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

4 படங்களுக்கு பூஜை

ஜூலை முதல் வாரத்தில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜை போடப்பட்டிருக்கிறது.

Updated On : 13 ஜூலை 2025, 12:15 am IST
பகிர்:

ஜூலை முதல் வாரத்தில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. அதில் ஓரிரு படங்களின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டனர். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'டிமான்டி காலனி 3', 'இவன் தந்திரன் 2', பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என நான்கு படங்களுக்கு பூஜைப் போடப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் கே.ஜே. ஆர். கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் இது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ரீகன், அறிமுக இயக்குநராக இப்படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஹீரோவாக அறிமுகமாகும் 'அங்கீகாரம்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் ரா. கண்ணன் இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இவன் தந்திரன்'.

Advertisement

இப்படத்தின் இரண்டாம் பாகம் 'வடசென்னை' சரண் நடிப்பில் வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தனர். இப்படத்தின் பூஜையும் நடைபெற்றிருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு 'டிமாண்டி காலனி' படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியானது. இப்படம் வெளியாகி ஓராண்டிற்குள்ளாகவே படத்தின் மூன்றாம் பாகத்தையும் தொடங்கிவிட்டார்கள்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வெளியாகியிருக்கிறது. படத்தில் தபு, சம்யுக்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும், நடிகை சார்மி கௌரும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.