ஞாயிறு கொண்டாட்டம்

உண்மைச் சம்பவங்களின் பின்னணி...

ராதா ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஐ. பி. எல்'. கருணாநிதி இயக்கத்தில் கிஷோர், வாசன், அபிராமி, குஷிதா, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ராதா ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஐ. பி. எல்'. கருணாநிதி இயக்கத்தில் கிஷோர், வாசன், அபிராமி, குஷிதா, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இம்மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் கருணாநிதி பேசுகையில், ""ஐ.பி.எல். இந்தியன் பீனல் லா இந்திய தண்டனை சட்டம்.

சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், அந்த பிரச்னையை சாதாரண மனிதன் மேல் திணித்துவிட்டு எப்படித் தப்பித்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்குப் பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால்தான் உண்மை தெரியவரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், நாம் அதை எளிதாகக் கடந்து சென்று விடுவோம். இது போன்றதொரு செய்தியைத்தான் திரைக்கதையாக்கி இருக்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT