பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!
பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் முன்னிலை...
பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் முன்னிலை வகித்து வருகிறார்.
குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பிகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்த நிலையில் இன்று (ஆக. 3) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் முதல் இரண்டு சுற்றுகளிலும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் முன்னிலை வகித்து வருகிறார்.
Advertisement
Advertisement
2 -வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட 1,161 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகித்து வருவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பங்கிப்பூர் தொகுதியில் மிகவும் குறைவாக 34% வாக்கு சதவீதமே பதிவானது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா ஆகிய 2 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
Bihar byelection: Prashant Kishor in the lead in bankipur constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.