FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! நிதின் நவீன் தொகுதியைக் கைப்பற்றினார்!

பிகார் இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளது பற்றி...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:41 pm IST
பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர். - பிடிஐ
பகிர்:

பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பிகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (ஆக. 3) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர், ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் எண்ண வேண்டிய வாக்குகளைவிட அவரது வாக்கு வித்தியாசம் அதிகமிருப்பதால் அவர் வெற்றி பெறுகிறார்.

தற்போது இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 22 -வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட 12,809 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இது பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனின் தொகுதியாகும். நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அதன் விளைவாக நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக பிகாரில் பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றியுள்ளதால் இது அவருக்கு மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பங்கிப்பூர் தொகுதியில் மிகவும் குறைவாக 34% வாக்கு சதவீதமே பதிவானது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா ஆகிய 2 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

summary

Prashant Kishor wins in the Bihar by-election, He captures Nitin Navin constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments