முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உளவியல் சிக்கல்

ஸ்ரீகங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'முதற்கனல்'.

Updated On : 26 ஏப்ரல் 2026, 1:08 am IST
பகிர்:

ஸ்ரீகங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'முதற்கனல்'. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை வெங்கட்டரமணன் இயக்கியுள்ளார். அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபாபத்மநாபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

'அப்பா வேணாம்ப்பா' படத்தில் மதுவினால் ஒரு குடும்பம் எந்த அளவுக்குச் சீரழிகிறது என்பதை கமர்சியலான ஒரு படமாகக் கொடுத்த இயக்குநர் வெங்கட்டரமணன், 'முதற்கனல்' படத்தில் போதைப்பொருள் கலாசாரத்தால் இன்றைய இளைஞர்

களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது, அவர்களது குடும்பம் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

படம் குறித்து அவர் பேசும் போது, 'உலகெங்கிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகம். மதுவினால் ஏற்படும் போதை மற்றும் சீரழிவைவிட இப்படிப்பட்ட சிந்தடிக் போதைப் பொருள்கள் இளைஞர்களின் வாழ்வை வெகு குறுகிய காலத்திலேயே சீரழித்து விடுகின்றன.

அன்றாடம் போதைப்பொருள் வழக்குகள் குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, போதை மீட்பு மறுவாழ்வு மையத்துக்கு நேரில் சென்று பார்த்தபோது தான், பள்ளி செல்லும் இளைஞர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்குப் போகும் வயதில் இருப்பவர்கள் எனப் பலரும் இப்படிப் போதைப்பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி, தங்களையே தொலைத்துவிட்ட அவலத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல், அதனால் ஒவ்வொரு குடும்பமும் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.