FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கவன ஈர்ப்பு சிகிச்சை

பன்னிரண்டு ஆண்டுகளாக இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியும், சமூக நலனில் அக்கறை கொண்டும் கவனம் ஈர்க்கிறார் தோல் நோய் சிகிச்சை நிபுணர் ச. தெட்சிணாமூர்த்தி.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:04 am IST
பகிர்:

பன்னிரண்டு ஆண்டுகளாக இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியும், சமூக நலனில் அக்கறை கொண்டும் கவனம் ஈர்க்கிறார் தோல் நோய் சிகிச்சை நிபுணர் ச. தெட்சிணாமூர்த்தி. அவரிடம் பேசியபோது:

'எம்.பி.பி.எஸ். படித்து, தோல் நோய் மருத்துவம் முடித்து சொந்த ஊரிலேயே மக்களுக்கு மருத்துவச் சேவை அளித்து வருகிறேன்.

1998-இல் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து 'திசைகள் மாணவ வழிகாட்டி' எனும் அமைப்பைத் தொடங்கினோம். அதன் தலைவராகச் செயல்பட்டு வருகிறேன்.

Advertisement

Advertisement

இந்த அமைப்பின் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதில் ஒன்றுதான் இலவச தோல் நோய் மருத்துவச் சிகிச்சை முகாம்.

அண்மையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இலவச தோல் நோய் சிகிச்சை முகாமை நடத்தினேன்.

போர் நிறுத்தம், இலங்கைக் கடற்படையினரால் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தல், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு, பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்தல், ஆணவக் கொலைகளுக்கு எதிராக, மணல் கொள்ளைக்கு எதிராக... என்று பல்வேறு பிரச்னைகளை மையப்படுத்தி தோல் நோய் சிகிச்சை முகாம்களை நடத்தியுள்ளேன்.

சென்னையில் மழை வெள்ளத்தின்போது முகாம்கள், எண்ணூரில் எண்ணெய்க் கசிவின்போது முகாம்கள், தண்ணீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வேங்கைவயல் சர்ச்சையின்போது முகாம் எனத் தொடர்ச்சியாக பல முகாம்களை நடத்தியுள்ளேன்.

ஒவ்வொரு முகாம்களிலும் சராசரியாக 150 பேர் வருகிறார்கள். ஆவுடையார்கோவிலில் ஆணவப் படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட முகாமில் முந்நூறு பேர் பங்கேற்றனர். மக்களிடம் பொதுப் பிரச்னைகள் குறித்த கவன ஈர்ப்பையும் மேற்கொள்கிறேன்' என்கிறார் தெட்சிணாமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments