சாதனை சிறுவர்கள்...
தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சகோதரர், சகோதரியான சி. அனிஷ், சி. ஜான்வி ஆகிய இருவரும் இருவேறு பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சகோதரர், சகோதரியான சி. அனிஷ், சி. ஜான்வி ஆகிய இருவரும் இருவேறு பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் 2026 போட்டி சென்னை கிண்டியில் அண்மையில் நடைபெற்றது. இதில் அனிஷ், ஜான்வி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கமும், கோப்பையையும் பெற்றனர்.
இவரது பெற்றோர் குழந்தைகளின் தனித்திறன்களை சிறுவயதிலேயே கண்டறிந்து, கல்வியுடன் விளையாட்டு, தனித்திறன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளித்து வருகின்றனர். பயிற்சியாளர் சுதர்சன் வழிகாட்டுதலும் கூடுதல் ஊக்கம் தந்தது.
Advertisement
Advertisement
வேளச்சேரியில் உள்ள செயின்ட் பிரிட்டோஸ் அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சி. அனிஷும், டி.ஏ.வி. பாபா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சி. ஜான்வியும் படித்து வருகின்றனர்.
இதுகுறித்து வங்கி ஊழியரான தந்தை சிவா, தாய் நித்யாவுடன் பேசியபோது:
'அனிஷ், ஜான்வி இருவரும் சிலம்பத்தில் மட்டுமின்றி கராத்தே, ஓட்டம், யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறுவயதிலேயே சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
இருவரும் சிலம்பத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளனர். ஜான்வி இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற சிறுமி ஆவார். அனிஷ் 10 கி.மீ. ஓட்டம், கண்ணைக் கட்டிக்கொண்டு சிலம்பம் ஆடுதல், பானையின் மீது சிலம்பம் ஆடுதல் உள்ளிட்ட பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். நானும், எனது கணவரும், இரு குழந்தைகளும் கின்னஸ் உலகச் சாதனை உள்ளிட்ட பல்வேறு சாதனைப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளோம்' என்றனர்.
'சிலம்பக் கலையில் தொடர்ந்து பல்வேறு உயரங்களைத் தொட்டு சர்வதேச அளவில் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்' என்கிறார் அனிஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.