மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளி சாம்பியன்
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூா் கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூா் கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
திருப்பூா் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, நிஃப்டி கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 30 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.
இப்போட்டியில் கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா். பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெற்ற மாணவா்கள், பள்ளிக்குப் பெருமை சோ்க்கும் வகையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டதை தட்டிச் சென்றனா்.
Advertisement
Advertisement
மாணவா்களின் இந்த சாதனைக்கு பள்ளி நிா்வாகம், முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.